தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோரை காவல்துறை செயலி மூலம் கண்காணிப்பு

Admin

காஞ்சிபுரம் : ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் சுற்றுவோர் மீது காவல்துறை செயலி கண்காணிப்பின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சாமுண்டீஸ்வரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலர்கள் அது செல்லிடப்பேசியில் கடந்த சில தினங்களாக ஸ்மார்ட் கார்ட் என்ற செய்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயலி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளனர் செயலி மூலமாக பொதுமக்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிவதை கண்காணிக்க முடியும். சம்பந்தப்பட்ட நபரின் வாகனமும் அவரது புகைப்படமும் இதில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து விதிகளை மீறி மீண்டும் மீண்டும் வாகனங்களில் சுற்றுவதாக ஆயிரத்து 323 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பிற மாவட்ட மக்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழைய தடை, எஸ் பி அரவிந்தன் உத்தரவு

115 திருவள்ளூர் : மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களை திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதிக்க கூடாது என காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS உத்தரவிட்டுள்ளார் தாக்கம் பல […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452