திருநெல்வேலி: திருநெல்வேலி சரக துணை தலைவர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மற்றும் ஆயுதப்படை அலுவலகங்களில் பணிபுரிந்துவரும் 17 தூய்மை பணியாளர்கள் கொரோனா இருக்கும் காலகட்டங்களில் அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொண்டதற்காக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிசில் அவர்கள் மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் உடனிருந்தனர்.
தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
