துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி?

Admin 1

துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும்?

என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்?

தனிப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அடிப்படையில் துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு சென்னையில் உள்ளவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாவட்டங்களில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது தங்களது வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு), தொழில்ரீதியான விவரங்கள் (பாங்க் பேலன்ஸ் ஷீட், ஆடிட் ரிப்போர்ட்), சொத்து விவரங்கள், அவர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த போலீஸ் எஃப்.ஐ.ஆர். நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும். அந்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் கமிஷனர்/கலெக்டர் அலுவலகத்தின் வாயிலாக விசாரணை நடைபெறும். அவர்களிடம், என்ன காரணத்திற்காக துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிற ரீதியில் விவரங்கள் கேட்கப்படும். துப்பாக்கி வாங்க விரும்புபவர் வசிக்கும் பகுதியின் உள்ளூர் காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரி நேரில் வந்து விசாரிப்பார். இதன் அடிப்படையில்தான் துப்பாக்கி வாங்குவதற்கான லைசென்ஸ் வழங்கப்படும். அந்த லைசென்ஸை வைத்து துப்பாக்கி விற்கும் நிறுவனங்களில் துப்பாக்கி வாங்கலாம். துப்பாக்கி வாங்க விரும்புபவர்கள் மீது ஏற்கெனவே கிரிமினல், சிவில் புகார்கள் இருந்தால் அவர்களது லைசென்ஸ் மனு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதுதவிர போலீஸுக்கு வேறு எந்த வகையில் சந்தேகம் இருந்தாலும் அதன் பெயரிலும் லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. ஏர் கன் வகை (Air Gun) துப்பாக்கிகள் வாங்குவதற்கு லைசென்ஸ் எதுவும் தேவையில்லை.

துப்பாக்கி லைசென்ஸ் எத்தனை வருடங்களுக்கு செல்லுபடியாகும்?

புதிதாக துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கி வாங்க வேண்டும். அதற்கான லைசென்ஸ் மூன்று வருட காலத்துக்கு கொடுக்கப்படுகின்றது. அந்தக் காலக்கெடு முடிந்த பிறகு கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். அதைப் புதுப்பிக்க கமிஷனர்/ கலெக்டரிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே துப்பாக்கி உரிமம் இருந்த காலத்தில் உங்களின் பேரில் காவல்துறையின் நற்சான்றிதழ் அவசியம் தேவை. உரிமம் பெற்ற காலத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர் மீது போலீஸுக்கு சந்தேகம் வந்தால், அவர்கள் விசாரணைக்கு எந்த நேரத்திலும் உட்பட வேண்டியிருக்கும். இதுதவிர, அந்தத் துப்பாக்கி தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.

லைசென்ஸ் பெற்ற பின்பு எத்தனை துப்பாக்கிகள் நாம் வைத்துக் கொள்ளலாம்?

போலீஸ், ராணுவம் போன்றவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி வகைகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதில்லை. அவை தவிர்த்து சிலவகையான துப்பாக்கிகள் மட்டுமே விற்கப்படுகின்றன. துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற ஒரு நபர் அதிகபட்சம் மூன்று துப்பாக்கிகளை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். ரிவால்வர் (Revolver), பிஸ்டல் (Pistol), சிங்கிள் பேரல் கன் (Single Barrel Gun), டூ பேரல் கன் (Two Barrel Gun), சிங்கிள் ரைபிள் (Single Rifle), டபிள் பேரல் ரைபிள் (Double Barrel Rifle) ஆகிய வகைகளில் துப்பாக்கிகள் கிடைக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் ஒன்று மட்டுமே வாங்க முடியும். இந்த வகையான துப்பாக்கிகள் ரூபாய் ஐம்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சம் வரையாகும். தோட்டாக்கள் எண்ணிக்கை என்கிற விஷயத்தில் ஒரு வருடத்துக்கு 100 தோட்டாக்கள் வரை வாங்க முடியும். துப்பாக்கி வாங்கியவர் வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவரே பொறுப்பு.

வேறு மாநிலங்களுக்குதுப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாமா?

சென்னை அல்லது தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களில் துப்பாக்கி லைசென்ஸ் பெற்று இருந்தால், தமிழகத்தில் உள்ள எல்லா பகுதிக்கும் எடுத்துச் செல்லலாம். வேறு மாநிலங்களுக்குப் போகும்போது மறுபடி, போலீஸ் கமிஷனர்/கலெக்டரின் அனுமதி பெற்றே எடுத்துச் செல்ல வேண்டும்.

துப்பாக்கியை சரண்டர் செய்வது எப்படி ?

தற்காலிகமாக வெளிநாடு போய்வரும் பட்சத்தில் துப்பாக்கியை வாங்கிய இடத்திலோ, அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம். நிரந்தரமாக துப்பாக்கியை சரண்டர் செய்ய அதற்கான லைசென்ஸை காவல் நிலையத்தில் சரண்டர் செய்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். துப்பாக்கியை வாங்கிய இடத்திலே திரும்பக் கொடுத்தால், இருபதிலிருந்து முப்பது சதவிகிதம் கழித்து மீதி தொகைக்கு அவர்களே அதை எடுத்துக்கொள்வார்கள்.

One thought on “துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு

522 மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452