துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி வெற்றி பெற்ற காவல் உயரதிகாரிகள்

Admin

திருச்சி : திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கு இன்று 21.08.2021-ம் தேதி
கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.அமல்ராஜ் இ.கா.ப அவர்களின் தலைமையில் துப்பாக்கி சுடும் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டில் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை தலைவர்கள்,காவல்துறை துணை தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு வகையான துப்பாக்கியில் போட்டி நடைப்பெற்றது.
பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
1.திரு.அருண் இ.கா.ப (திருச்சி மாநகர ஆணையர்)
2. திரு.பிரவேஷ்குமார் இ.கா.ப (தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்)
3.திரு.ஜவஹர் இ.கா.ப (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)
இன்சாஸ் துப்பாக்கி சுடும்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
1.திரு.ஜவஹர் இ.கா.ப (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)
2.திரு.பிரவேஷ்குமார் இ.கா.ப (தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்)
3.திரு.விஜயகுமார் இ.கா.ப (திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)
திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப (புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)

ஒட்டுமொத்தமாக (Overall) வெற்றி பெற்றவர்கள்

1.திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப (தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்)
2.திரு.ஜவஹர் இ.கா.ப (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)
3.திரு.அருண் இ.கா.ப (திருச்சி மாநகர ஆணையர்)
வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் (கமாண்டோ) திரு.அமல்ராஜ் இ.கா.ப அவர்கள் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் வழங்கினார்.


திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

866 கிருஷ்ணகிரி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு நபர்கள் கொலை வழக்குகளில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,மேலும் எதிரிகள் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452