திருவள்ளூர் பள்ளியில் காவல் ஆய்வாளர்

admin1

திருவள்ளூர் :  கடந்த  சில நாட்களுக்கு  முன்பு ஆசிரியர், வகுப்பறையில் பாடம்  எடுத்து கொண்டிருக்கும் போது மாணவன் ஒருவன் எழுந்து நடனம் ஆடுவது மேலும் செல்போனில் வகுப்பறையில் செல்பி எடுப்பது ஆசிரியர்கள் இடையே வாக்குவாதம் போன்ற, பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.  இந்நிலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, திருவள்ளூர் மாவட்டம்  மீஞ்சூர் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளியில் 200 கும் மேற்பட்ட  மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இடையே, ஒழுக்கம் பற்றிய  விழிப்புணர்வு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட  மீஞ்சூர் காவல் ஆய்வாளர் திரு .சிரஞ்சீவி , பள்ளி மாணவர்கள் முதலாவதாக, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு  கீழ்ப்படிய  வேண்டும். முடி கட்டிங், செய்துவரவேண்டும், காதில் கம்மல், கையில் வளையல் செயின், அணிவதில் விழிப்புணர்வு தேவை, எனவும் கஞ்சா, உட்பட போதைப் பொருளுக்கு அடிமையாகி விடக்கூடாது கஷ்டப்பட்டு படிக்க  வைக்கின்ற  பெற்றோரை,  நினைத்து படிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் ஆய்வாளர் உடன் மாணவர்கள் ”என்னால் எங்கள் பள்ளி பெருமை அடையும்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் இதில் தலைமையாசிரியர் திரு . வேலு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், துணைத்தலைவர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் குரு திரு . சாலமோன் உட்பட பலர் , கலந்து கொண்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னையில் பரபரப்பு வாலிபர் படுகொலை

545 சென்னை :   சென்னை அம்பத்தூர்  சிவானந்தம், நகரை சேர்ந்த லோகேஷ் என்ற கார்த்திக்கும், அவரது தம்பி வெங்கடேஷ், இவர்கள் இருவரும் அம்பத்தூர் வானகரம் நெடுஞ்சாலையில் கலைவாணர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452