திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் உட்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Admin

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா, ஏரிதண்டா கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரவி வ/29 என்பவரையும், தண்டராம்பட்டு தாலுக்கா கீழ்பாச்சார் கிராமத்தை சேர்ந்த சாந்து நாய்க்கர் மகன் முருகன் வ/34 என்பவரும் பலமுறை வழக்கு பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்றுக் கொண்டிருந்தவர்களை தானிப்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் திருவண்ணாமலை நகரில் கோபுர தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி பத்மா வ/ 52 என்பவர் பல முறை வழக்கு பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விட்டுக்கொண்டிருந்தவரை திருவண்ணாமலை நகர காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கண்ட மூன்று நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.MR.சிபிச் சக்கரவர்த்தி IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி IAS., அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 32 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆயுதப்படை பயிற்சிப் பள்ளியில் தர்மபுரி SP, ASP மற்றும் DSP ஆய்வு

158 தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை தற்காலிக பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 113 பெண் காவலர்கள் (03.05.2020) அன்று அறிக்கை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452