திண்டுக்கல் கிரைம்ஸ் 22/06/2022

admin1

திண்டுக்கல் :  திண்டுக்கல் பித்தளைப்பட்டி அருகே வீட்டில்,  குட்கா பதுக்கிய காமாட்சி பிரபு, அலெக்ஸ் பாண்டியன், ஆகிய 2 பேரை தாலுகா காவல் ஆய்வாளர் திரு.பாலாண்டி,  உதவி காவல் ஆய்வாளர் திரு. மலைச்சாமி, ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர்,  கைது செய்தனர்.

தீ விபத்து, ஒருவர் பலி!

 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள,  அர்ஜுன் பட்டாஸ் கடையில் தீ விபத்து,  ஒருவர் பலி ஒரு ஆம்னி கார், 2 இருசக்கர வாகனம் தீ விபத்து.

கஞ்சா விற்ற, 4 பேர் கைது!

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல்துறையினரால்,  சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது. 8.5 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனம் ரூ.7 ஆயிரம் பணம் பறிமுதல்,  செய்த காவல் துறை தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை.

பெண்ணை தற்கொலைக்கு, தூண்டிய 2 பேர் சரண்! 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில்,  உள்ள நாயக்கனூரை சேர்ந்த சித்ரா (27),  என்ற பெண்ணிடம் மது குடிக்க பணம் கேட்டு கோணமண்டையன் என்ற குணசேகரன்(42), பிரபாகரன்(33),  மிரட்டியுள்ளனர். அவர் பணம் இல்லைஎன்று கூறியதால், அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில்,  இருந்தவர்களிடம் கூறி கதறி அழுத சித்ரா பின்னர் தனது வீட்டிலேயே விஷம் குடித்து மயங்கினார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்,  அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் எரியோடு காவல் ஆய்வாளர் திரு. சத்யபிரபா வழக்குபதிவு செய்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய 2 பேரை தேடிவந்தனர்.  தங்களை தேடி வருவதை அறிந்த பிரபாகரன்,  மற்றும் கோணமண்டையன் ஆத்தூர் நீதிமன்றத்தில் , சரணடைந்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால்,  காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர்,  முடிவு செய்துள்ளனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல் துறையினரின் சீரிய பணி, டி.ஜி.பி. யின் பாராட்டு!

574 சென்னை :  தமிழ்நாடு கோயில்களிலிருந்து , திருடப்பட்ட விலைமதிப்பற்ற 10 புராதன உலோக மற்றும் கற்சிலைகளை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய, நாடுகளின் அருங்காட்சியகங்களிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்கு […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452