தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட மதகுபட்டி SI ரஞ்சித் மற்றும் குழுவினர்

Admin

”கொரோனா ஊரடங்கால் பல மடங்கு வேலைப்பளுவை சந்தித்துள்ள காவல்துறை, ஜீவாவின் தற்கொலை மிரட்டலால் தலைவலியை சந்தித்துள்ளனர்”

சிவகங்கை : சிவகங்கை அருகே ஓக்கூர் திருப்பதி நகரில் வசிக்கும் ஜீவா என்ற இளைஞர் நேற்று மாலை குடிபோதையில் அவர் மனைவியுடன் வீட்டில் சண்டை போட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் சண்டையை விலக்கி விட்டு, திட்டியதால் மனமுடைந்தும் ஆத்திரமடைந்தும் திடீரென வீட்டின் அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவல் அறிந்த மதகுபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ரஞ்சித் மற்றும் தீயணைப்பு துறை அவர்கள் சிறப்பாக துரிதமாகவும் செயல்பட்டு இந்த வாலிபர் உயிரை காப்பாற்றி உள்ளார்.

சமரசம் செய்தும் அவர் இறக்க மறுத்ததால், அவரின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மேலே ஏறி ஜீவாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஜீவா, ஏறி நின்று மிரட்டல் விடுத்ததால் ஒக்கூர் பகுதியில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் கூட்டமாக கூடினர். கொரோனா ஊரடங்கால் பல மடங்கு வேலைப்பளுவை சந்தித்துள்ள போலீசார், ஜீவாவின் தற்கொலை மிரட்டலால் தலைவலியை சந்தித்துள்ளனர்.

மதகுபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ரஞ்சித் அவர்களுக்கும், வேகமாக செயல் பட்ட ஊர்காவல் படை குருநாதன், பிரவீன், கார்த்திக் குழுவிற்க்கும் நன்றியும், பாராட்டுக்களையும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆண்களுக்கும், பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்த ADGP ரவி

நாடு முழுவதும் ஊரடங்கு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், குடும்பத்தில் சண்டை சச்சரவு காரணமாக பெண்கள், குழந்தைகள் தாக்கப்படுவதாக புகார் எழுந்தது.

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452