தமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை

Admin

தமிழ்நாடு காவல் துறை காவலர்கள் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீரமணி அவர்கள் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎஸ் அவர்களுக்கு பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு, அதைத் தொடர்ந்து ஒரு நீண்ட நெடிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் விடுவித்த அந்தக் கோரிக்கைகள் கூறியுள்ளதாவது,

தமிழகத்தைப் பொறுத்த அளவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறை இயங்கி வந்தாலும், காவல்துறையில் பணியாற்றிய காவலர் இறந்துவிட்டால் அவரின் உடலை இதுவரை எந்த உயர் அதிகாரியும் சுமந்ததே இல்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு ரவுடி துரை முத்து, வல்லநாடு மனக்கரை காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி துரைமுத்துவை துரத்திபிடிக்கச் சென்ற காவலர் இளைஞர் சுப்ரமணி நாட்டு வெடி குண்டு வீசி தாக்கப்பட்டு படுகாயமடைந்து உடல் சிதைந்து உயிர்த்தியாகம் செய்தார். இதை நாடறியும்…….!

அப்படி பணியில் உயிர் தியாகம் செய்த இளம் காவலர் சுப்பிரமணியன் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎஸ் அவர்கள்.சுப்ரமணியனின் வீர.. தீர.. தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக சுப்ரமணியனின் பூதவுடலை சுமந்து வந்தார்.

இந்த காட்சியை தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக பார்த்த அனைத்து தமிழ் நெஞ்சங்களும் நெகிழ்ந்து போயினர்…!

எனவே காவல்துறை வரலாற்றிலேயே இறந்து போன ஒரு காவலரின் உடலை முதல் முதலில் சுமந்து மரியாதை செலுத்திய முதல் உயர் அதிகாரி என்கின்ற பெரும் மதிப்புக்குரிய அந்தஸ்த்தை பெற்றுள்ளார் உயர்திரு.திரிபாதி ஐபிஎஸ் அவர்கள்.

காவல் துறை இயக்குனர் ஐபிஎஸ் திரு.திரிபாதி அவர்களுக்கு, எங்களது காவல் துறை காவலர்கள் சங்கத்தின் சார்பாகவும், காவல்துறை காவலர்கள் சங்கத்தின் முன்னால் துணைத்தலைவர் என்கின்ற வகையிலும் எங்களது பாராட்டுக்களையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎஸ் அவர்களுக்கு இத்தகைய ஒரு அரிய செயலை செய்வதற்கு வாய்ப்பளித்து ஒத்திசைவு தந்த நமது தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கும் எங்களது பாராட்டுக்களையும் மரியாதையையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.

அத்தோடு எங்களது நீண்ட காலமாக வேண்டுகோளையும் இந்த தருணத்தில் பதிவு செய்கிறேன்…!

இந்திய அளவில் எட்டு மாநிலங்களில் காவல்துறையினருக்கு என்று சங்கங்கள் உண்டு. அவை மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், செயல்பட்டு வருகிறது என்பதை அனைத்து காவல்துறை உயரதிகாரிகளும் நன்கு அறிவார்கள்.

அதுபோலவே தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் நீண்ட நாள் கோரிக்கையாகவும், கனவாகவும் உள்ளது காவல்துறையினருக்கு என்று ஒரு காவலர்களின் சங்கம் வேண்டும் என்று, தமிழ்நாடு காவலர்களின் நலன் கருதி அவர்களுக்காக சங்கம் வேண்டும் என்று நீண்ட நாள் அரும்பாடுபட்ட மறைந்த எங்கள் தலைவர் சிவக்குமார் அவர்களின் அரும்பணியை யாரும் மறுக்க முடியாது.

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சங்கம் அமைப்பதற்காக, 1979, 1981ம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., சில அரசாணைகளை பிறப்பித்தார். அந்த உத்தரவுகளுடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களை, காவலர்கள் சங்க தலைவர் மறைந்த சிவக்குமார் தலைமையில் ஒரு குழு நேரடியாக சந்தித்தது.

அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூறிய ஆலோசனை, அறிவுரையை கருத்தில் கொண்டு, 2001ல் தமிழ்நாடு காவலர் சங்கம் துவக்கப்பட்டது.ஆனால் இன்று வரை சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், சங்கம் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் காவலர் சங்கமும், அகில இந்திய அளவில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கமும் அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும் போலீசாரின் கனவான காவலர் சங்கத்துக்கு, அங்கீகாரம் தரப்படவில்லை.

கருணை உள்ளத்தோடு தோடு அனைவரையும் அணுகும் காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎல் அவர்களும், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியாரால் மட்டுமே, காவலர் சங்க அங்கீகாரம் தமிழகத்தில் சாத்தியப்படும்’ என்பது, லட்சோபலட்சம் காவலர் குடும்பங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

அப்படியாக தங்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டால், காவலர்கள் சங்கத்தின் மறைந்த எங்கள் தலைவர் சிவக்குமார் அவர்கள், மாண்புமிகு மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையாரிடம் கொடுத்த வாக்குறுதியின்படி, அதாவது, கட்டுப்பாடு, ஒற்றுமை, இறையாண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுடன், பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படவும், சங்கம் பாலமாக அமையும்.

காவலர் சங்கம் எந்தக் காலகட்டத்திலும் வேலை நிறுத்தம், போராட்டம், பொதுவாக வேலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாது. சங்க உறுப்பினர்கள், அதிகாரிகளிடமும், அரசிடமும், மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வர். ஜாதி, மத, அரசியல் இயக்கங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட மாட்டோம்.
அரசியல் சாயம் இல்லாமல் தனித்தன்மையுடன் செயல்படுவோம் என்று எங்கள் மறந்த தலைவர் சிவக்குமார் உறுதியளித்திருந்தார்.

காவலர் சங்கத்துக்கு, தாங்கள் அங்கீகாரம் வழங்கும் நாளை, ஒட்டு மொத்த போலீஸ் குடும்பத்தினரும், ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர் என்று தனது கோரிக்கை காவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் வீரமணி  கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை.

3,258 வேலூர் : வேலூர் மாவட்டத்தில் சிறப்பு காவல்படை 15ம் அணியில் பணியாற்றி வந்த திரு. இம்ரான் (17 Batch) என்ற காவலர் இன்று காலை முதல் முதல்வர் வருகைக்கான பணியில் ஈடுப்பட்டவர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452