தமிழக காவல் துறை அதிகாரிகள் 25 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

Admin

காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தின் போதும், குடியரசு தினத்தின் போது தகைசால், பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த மூன்று பேருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் விருதுகளும், 22 பேருக்கு பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவர் விருதுகளும் மத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை ஒட்டி, மத்திய உள்துறை அமைச்சகத்தால் 942 பேருக்கு போலீஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகக் காவல் துறையில் 25 பேருக்கு விருதுகள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:

குடியரசுத் தலைவரின் தகைசால் விருது:
1. எம்.என். மஞ்சுநாதா- கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர், தொழில்நுட்ப பணிகள், சென்னை.
2. கே.பி.சண்முக ராஜேஸ்வரன்- காவல் துறைத் தலைவர், பயிற்சி, சென்னை.
3. எஸ்.திருநாவுக்கரசு- கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு காவல் அகாதெமி, சென்னை.

குடியரசுத் தலைவர் பாராட்டத்தக்க பணிக்கான விருது:
1. பி. விஜயகுமாரி- காவல் இணை ஆணையர், மேற்கு மண்டலம், சென்னை.
2. எம்.பாண்டியன்- காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை.
3. எஸ்.ராஜேந்திரன்- காவல் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம், சென்னை.
4. எம்.எஸ். முத்துசாமி, காவல் துணை ஆணையர், செயின்ட் தாமஸ் மவுன்ட், சென்னை.
5. பி.பகலவன்-காவல் கண்காணிப்பாளர், வேலூர்.
6. ஏ. முகமது அஸ்லாம், துணை காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம்.
7. எஸ். அனந்தகுமார்-துணை காவல் கண்காணிப்பாளர், சிறப்பு புலனாய்வுக் கோட்டம், சிபிசிஐடி, கோயம்புத்தூர்.
8. ஆர்.விஜயராகவன்-துணை காவல் கண்காணிப்பாளர், சிபிசிஐடி, திருச்சி.
9. டி.பாலமுருகன்- துணை காவல் கண்காணிப்பாளர், கடலோரப் பாதுகாப்பு குழு, சென்னை மண்டலம்.
10. டி.சேகர்- துணை காவல் கண்காணிப்பாளர், தொலைத் தொடர்புப் பிரிவு, சென்னை.
11. எம். குமரகுருபரன்-துணை காவல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு, எஸ்ஐசி, சென்னை.
12. ஐ.சுப்பையா-துணை காவல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு, எஸ்ஐசி, திருநெல்வேலி.
13. கே.ராமச்சந்திரன்-துணை காவல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு, திருச்சி.
14. எஸ். முத்துவேல்பாண்டி-உதவி காவல் ஆணையர், மத்திய குற்றப் பிரிவு, சென்னை.
15. பி. ஸ்டீபன்-உதவி காவல் ஆணையர், மத்திய குற்றப் பிரிவு, சென்னை.
16. ஜி.தேவராஜ்-காவல் ஆய்வாளர், பெரம்பலூர்.
17. ஏ. அண்ணாமலை-காவல் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு சென்னை.
18. பி.ராஜாராம்-காவல் உதவி ஆய்வாளர், பாதுகாப்புப் பிரிவு, சிஐடி, சென்னை.
19. கே.பி. லாரன்ஸ்-சிறப்பு உதவி ஆய்வாளர், எஸ்பிசிஐடி, சென்னை.
20. இ.முனுசாமி-சிறப்பு உதவி ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு, எஸ்ஐசி, சென்னை.
21. எஸ்.ஜே. உமேஷ்-தலைமைக் காவலர், எஸ்பிசிஐடி, சென்னை.
22. எஸ்.ஜஸ்டின் ராஜ்-துணை காவல் கண்காணிப்பாளர், எஸ்சிஎஸ்டி கண்காணிப்பு பிரிவு, மதுரை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பென்டிரைவ் வழங்கும் நிகழ்ச்சி

357 கடலூர்: சாலை விபத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சாலை விபத்துகள் நடக்கும் இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452