தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம்” லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர சோதனை

Prakash

திருவள்ளூர் : தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் கடந்த 27-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்படுகிறது. அதனடிப்பையில் அதிகம பணம் புழங்கும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச் செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர், மற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அ்ப்போது கணக்கில் வராத 53 ஆயிரத்து 130 ரூபாய் மற்றும் ஆவணங்களை டி.எஸ்.பி திரு.கலைச்செல்வன் தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சென்றதும் தங்கள் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போக்குவரத்து காவலர்கள் சார்பாக கொரோனா விழிப்புணர்வு

294 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடியில் போக்குவரத்து துணை ஆணையாளர் திரு.அசோக் குமார் உதவி ஆணையாளர் திரு.ஜெயகரன் அவர்களின் உத்தரவின்பேரில் இன்றுகொரானா வைரஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452