தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

Prakash
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் Axis வங்கி செயல்பட்டு வருகிறது. அவ்வங்கியில் Quess Corporate Ltd என்ற நிறுவனம் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அவர்களுக்கு சுய தொழில் தொடங்கும் விதமாக தவணை முறையில் கடன் தொகை வழங்கி கடன் தொகையை பயனாளிகளிடம் இருந்து மாதம் மாதம் தவணை முறையில் வசூல் செய்து வங்கியில் கட்டும் ஒரு நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனத்தில் வடக்கு வள்ளியூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் கார்த்திக்ராஜா 35.என்பவர் மார்ச் 2018 ம் ஆண்டு முதல் நவம்பர் 2019 ஆண்டு வரை Assistant Relationship manager- ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சுற்றுவட்டார பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களை சந்தித்து தாங்கள் சுயமாக தொழில் தொடங்க வங்கியில் நபர் ஒருவருக்கு ரூபாய்.26 ஆயிரம் கடன் தருவதாக கூறி பொது மக்களின் அடையாள அட்டை, புகைப்படம், கைரேகை, ஆகியவைகளை பெற்று கொண்டு 426 நபர்களை ஏமாற்றி அவர்களுக்கு லோன் கொடுப்பதாக கூறி கார்த்திக் ராஜா *ரூபாய்.51 இலட்சத்து 88 ஆயிரம் பணத்தை* வங்கியில் இருந்து பெற்றுக்கொண்டு பணத்தை சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கொடுக்காமல் அவர்களை ஏமாற்றி லோன் கொடுத்தது போல் வங்கி ஆவணங்களில் செலவு காட்டி ஏமாற்றியுள்ளார்.
மேற்படி தவணை தொகையை வசூலிப்பதற்காக வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் சென்று பணத்தை கேட்கும் போது தாங்கள் எவ்வித பணமும் இதுவரை வாங்கவில்லை என கூறியுள்ளார்கள். அதனால் பண மோசடியில் ஈடுபட்ட கார்த்திக் ராஜா மீது Quess Corporate Ltd நிறுவனத்தின் மேலாளர் பிரவீன் அவர்கள், நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்களிடம் மனு அளித்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட குற்றபிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ்குமார், அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரமா அவர்கள் தலைமையிலான உதவி ஆய்வாளர்‌ திரு.பவுல், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், திரு.புண்ணியமூர்த்தி, திரு.ஆறுமுகம் தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த கார்த்திக் ராஜாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் முகம் தெரியாத நபர்கள் யாரேனும் தங்களிடம் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி‌ தங்களது அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் சுய விபரங்களை கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் மேற்படி மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

290 மதுரை: மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ச. மணி அவர்கள், காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452