பெண் காவலர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக கொரோனா விழிப்புணர்வு கீதம்

Admin

சென்னை : சென்னை மாநகர காவல் துறையினரை குறிப்பாக பெண் காவலர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் “கொரோனா விழிப்புணர்வு கீதம்” என்ற தலைப்பில் குறும்படத்தை வெளியிட்டார்.

தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்மந்தமான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, சிறப்பு பிரிவு 03.06.2019 -ல் தொடங்கப்பட்டு, காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் அவர்களின் நேரடி கண்காணிப்பில், ஒரு காவல் துணை ஆணையாளர் அவர்களின் கீழ் செவ்வனே செயல்பட்டு வருகிறது.

கொரோனா ஆட்கொல்லி நோய் பரவிவரும் சூழ்நிலையில் சென்னை மாநகர காவல் சார்பாக 23.04.2020 அன்று இந்த கொடிய நோயினை பொருட்படுத்தாமல் கண் துஞ்சாமல் பணியாற்றும் சென்னை பெருநகர காவல் துறையினரை குறிப்பாக பெண் காவலர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் உயர்திரு. திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் “கொரோனா விழிப்புணர்வு கீதம்” (https://youtu.be/EEkEPOdyorY) என்ற தலைப்பில் குறும்படத்தை வெளியிட்டார்.

இக்குறும்படத்தை காவல் துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு அவர்களின் மேற்பார்வையில் Bestie, JOD Events மற்றும் Stage show India என்ற நிறுவனங்களை சார்ந்த திரு.ராஜோஷ் மோகன், திரு.விஜய் வெங்கட் நாராயணன், திரு.விஜய் சீனிவாசன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, திரு.இன்சமாம் அல் ஹக் அவர்களின் பாடலுக்கு திரு.சத்யா அவர்கள் இசையமைப்பில், பிரியா ஹிமேஷ், மாளவிகா ராஜோஷ் பாடியுள்ள குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.

 

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,000 வழங்கிய அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய தலைமைக் காவலர்

197 சென்னை : சென்னை பெருநகர காவல், T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் எம்.அன்பழகன், த.கா.36120 என்பவர் தனது மகன் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452