சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கை கழுவ தானியங்கி இயந்திரம்

Admin

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் (05.5.2020) அன்று வேப்பேரி காவல் ஆணையரகத்தில், தானியங்கி கைகழுவும் இயந்திரத்தின் (Touch Free Hand wash machine) பயன்பாட்டை துவக்கி வைத்தார்.

இதன் மூலம் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவல் அமைச்சுப் பணியாளர்கள், காவல் ஆணையரகத்திற்கு வருகை தரும் காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆணையரக அலுவலகத்திற்குள் நுழையும் முன்பு இந்த தானியங்கி இயந்திரத்தின் மூலம் கைகளை சுத்தம் செய்து கொண்டு அலுவலகத்திற்குள் நுழையலாம். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் மேற்படி இயந்திரத்தை நிறுவ உதவிய Young Indian’s C.I.I., Rajasthan Cosmo Club Diva and Thukral Foundation ஆகிய தன்னார்வ தொண்டு அமைப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திரு.ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., திரு.எம்.சுதாகர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை
 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

நீலகிரியில் ரைஸ் பீர் தயார் செய்த இருவரை கைது செய்த தனிப்படையினர்

நீலகிரியில் சைஸில் பீர் தயாரித்த இருவரை காவல்துறை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452