சிறுமியை கடத்திய, வியாபாரி கைது!

admin1

திண்டுக்கல் :   திண்டுக்கல் வடமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரின் (11),  வயது மகள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில்,  பள்ளிக்கு சென்ற சிறுமி திடீரென்று மாயமானாள். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவளை பல்வேறு இடங்களில்,  தேடி பார்த்தனர். ஆனால் அவள் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில்,  சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை காம்பார்பட்டியை சேர்ந்த பால் வியாபாரியான குணசேகரன் (42),  என்பவர் கோவைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் , கோவைக்கு சென்று, குணசேகரனை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாணவியை கடத்தி, திருமணம் செய்தவா் கைது!

568 ஈரோடு :   ஈரோடு மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த (16),  வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452