சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள்,

Prakash
சென்னை: சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, K-6 T.P சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் குழுவினர் 06.10.2021 அன்று காலை ஷெனாய் நகர், கல்லறைச்சாலை அருகே கண்காணித்த போது,
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 நபர்களை விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது,  அதில் சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் காவல் குழுவினர் 1) எழில் (எ) எழிலரசன் 48, எம்.ஜி.ஆர் நகர், 2) ஈஸ்வரன் 61, தேனி மாவட்டம் 3) மாரிமுத்து 48, அண்ணா நகர், 4) ரவி 57, கெருகம்பாக்கம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதியவரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்கள் கைது.

279 சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மூசா 73, என்பவர் கடந்த 03.10.2021 அன்று காலை தனது வீட்டிலிருந்த போது, அங்கு வந்த சிலர் மேற்படி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!