கோயில் நிலம்த்தை ரூ.2.75 கோடிக்கு, மோசடி செய்த தம்பதியினர் கைது

admin1
சென்னை :  சென்னை ஆலந்தூரை சேர்ந்த பிரசாந்த், என்பவர் (M / S . Prashanth homes) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.  கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்,  நங்கநல்லூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, மற்றும் நந்தகிஷோர்,  ஆகியோர் மயிலை மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான,  எண்-17/13, கல்லூரி சாலை, வேம்புலி சுபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை என்ற முகவரியில் உள்ள காலி இடத்தை,  விற்பனை செய்வதாக கூறி அந்த இடத்தின் நீதிமன்ற உத்தரவை மறைத்து, ரூ.2.75 கோடிக்கு விலைபேசி விக்கிரைய ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, வங்கி மூலமாக ரூ.1.75 கோடியை , குற்றவாளிகள் பெற்றுக்கொண்டு, மீதி பணம் ரூ.1 கோடிக்கு பிரசாந்தின், நங்கநல்லூர் பிளாட்டை , கீதா பெயருக்கு கிரையம் பெற்றும், மேற்படி கோயிலுக்கு சொந்தமான இடத்தை வாதி பிரசாந்த் பெயருக்கு குற்றவாளிகள், விற்றுள்ளனர்.
அதன்பிறகு மேற்படி இடமானது மயிலை,  மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்று தெரியவந்து, பிரசாந்த்  கேட்டபோது, பணத்தை திருப்பி தராமல் தலைமறைவாகிவிட்டனர்.  இது தொடர்பாக பிரசாந்த் கொடுத்த புகாரின்,  பேரில் மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள், மோசடி புலனாய்வு பிரிவில் (EDF-III) வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது . மேற்படி புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,  மற்றும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி. P.C. தேன்மொழி இ.கா.ப,  ஆகியோரின் உத்தரவின்பேரில், ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு ( EDF – III ) காவல் ஆய்வாளர் தலைமையிலான, காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு எதிரிகள் நந்தகிஷோர் (43),  நங்கநல்லூர் மற்றும் அவரது மனைவி கீதா (40), ஆகியோரை கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அகதிகள் முகாமில் மோதல், 2 பேருக்கு கத்திக்குத்து

561 கோவை :  கோவை ஆலாந்துறை அருகே, உள்ள பூலுவபட்டியில் இலங்கை அகதிகள், முகாம் உள்ளது .இங்கு வசிப்பவர் கிருஷ்ண பிரகாஷ் (32),  கட்டிட தொழிலாளி.  இவருக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452