கொரோனா நடவடிக்கைகள் பற்றி அவதூறாக பேசிய நபர்கள் மீது வழக்கு

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அதனடிப்படையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு இராமநாதபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தனர். அவருக்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. இருப்பினும் 14 நாட்கள் தனிமை படுத்த வேண்டிய நிலையில் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளார். இரண்டாவது முறையாக இரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உள்ளதாக தெரியவந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இராமநாதபுரத்திலிருந்து ஆம்புலன்ஸ் புறப்படும் முன் அவரது செல்போனை தொடர்பு கொண்ட உறவினரிடம் பேசுகையில் தனக்கு கொரோனா இல்லை அனைத்தும் பொய், வதந்தியை உண்டாக்குகின்றனர். இது ஒரு சூழ்ச்சி, பழிவாங்கும் செயல், கணக்கு காட்ட கொரோனா என கூறுகின்றனர். என இருவரும் உரையாடுகின்றனர். இந்த பதிவு வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் உட்பட மூவர் மீது IT Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 நபர்கள் கைது

85 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தென்மாவயல் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக 19.04.2020 அன்று கல்லல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452