போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்

Admin

சென்னை  : கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி வாகன சோதனை செய்து, விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்பணிகளின் போது, போக்குவரத்து காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, முகக்கவசங்கள் மற்றும் திரவ கிருமிநாசினி தெளிப்பான்கள் (Nasal Mask and Sanitizer) போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினரின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) திரு.கே.ஜெயந்த் முரளி, இ.கா.ப., அவர்கள் ஆகியோர் இன்று 13.04.2020 காவல் ஆணையரகத்தில், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு முக பாதுகாப்பு கவசம் (Face Shield) வழங்கினர்.

மூக்கு மற்றும் வாய் பகுதியை பாதுகாக்கும் Mask-ற்கு வெளிப்புறத்தில், முகம் முழுவதையும் பாதுகாக்கும் விதத்தில் இந்த முக பாதுகாப்பு கவசம் (Face Shield) அணியப்படுகிறது. இதனால் கண்கள் மற்றும் முகம் முழுவதிலும் துளி தொற்று (droplet infections) பரவாமல் இந்த கவசங்கள் பாதுகாப்பு அளிக்கும். முதற்கட்டமாக 3,000 முக பாதுகாப்பு கவசங்கள் (Face Shield) கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து சென்னை போக்குவரத்து காவல் துறையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இக்கவசங்களை தொடர்ந்து சுத்தம் செய்து அணிய முடியும். மொத்தம் 24,000 முக பாதுகாப்பு கவசங்கள் (Face Shield) கொள்முதல் செய்து போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிப்பு.

117 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் டிரோன் கேமரா மூலம் பழனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் இதர […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452