Wed. Aug 21st, 2019

கேள்விகள்

557 Views

[faq-in-minute]

காவல்துறை சார்ந்த சட்டங்கள் மற்றும் விளக்கங்கள்

தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொ ருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு என்றுக் கூறி 1982-இல் தமிழக அரசால் இயற்றப்பட்டது குண்டர் தடுப்புச் சட்டம் எனப்படும் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம். தமிழகத்தில் நிகழும் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை என்பதால், கைது செய்யப்பட்டவர் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழு மட்டுமே அணுக முடியும். கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக்குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டால் பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம். திருட்டு வீடியோ, சி.டி குற்றம் ஆகியவை 2004ம் ஆண்டும், மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு ஆகியவை 2006ம் ஆண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. பின்னர், மேற்கொள்ளப்பட்ட இரண்டு திருத்தங்களில் தொடர் குற்றவாளி என்ற வரையறை நீக்கப்பட்டதுடன், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி கைது செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது.
பெருகி வரும் குற்றச்செயல்கள் பெரும்பாலானவை சைபர் கிரைம் குற்றமாகவே தெரிய வந்துள்ளது. ஆன்லைன் சீட்டிங் தொடங்கி, பெண்களுக்கு கொடுக்கப்படும் பல தொந்தரவுகள் சைபர் கிரைமில் வருகிறது. இதில் எந்தெந்த குற்றத்திற்கு, எந்த வழக்கு போடப்படுகிறது ? எந்த வழக்கின் கீழ் குற்றச்செயல்கள் பதிய படுகிறதோ, அவர்களுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்பதை பார்க்கலாம். சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்? ஜ.டி. சட்டம் 2008ன் படி - மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் அதே போல் மேலும், ஒரு லட்சம் முதல் ஜந்து லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். கீழ்கண்ட செக்ஷன்களில் கைதானால் – பெரும்பாலும் பெயில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது பிரிவு - குற்றம் 66 - ஹேக்கிங் 66A - ஆபசமாக மெஸேஜ் அனுப்புவது 66B - கம்ப்யூட்டர், இன்டர்நெட் வழியாக திருடப்படுவது 66C - அடுத்தவர்களின் டிஜிட்டன் சைன், பாஸ்வேர்டுகளை திருடுவது 66D - போலி ஜடி உருவாக்கி, தன்னை வேறு ஒருவர் போல் காட்டி மிரட்டுவது, மோசடி செய்வது. 66E - ஆண், பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான முறையில் வெளியிடுவது 66F - சைபர் டெர்ரஸிஸம், இந்திய இறையாண்மைக்கு எதிரான் செயல்களில் ஈடுபடுவது 67 - ஆபாச போட்டோ வெளியிடுவது 67A - ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல் 67B - குழைந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுவது இது தவிர்த்து , மான நஷ்ட ஈடு வழக்கும், அனுப்பும் மெஸேஜில் மிரட்டல் இருந்தால், கொலைமிரட்டல் வழக்கும் தனியாக தொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
"விளம்பரம்" என்றால் சொற்கள், குறியீடுகள், சுவரொட்டிகள், அறிவிப்பு ஆகியவற்றை குறிக்கும் உதாரணமாக ஒரு நபரை கொலை செய்யுமாறு அல்லது வன்முறையை தூண்டுகிற மாதிரியான போஸ்டர்களை ஒட்டுவது அல்லது சுவற்றில் விளம்பரம் செய்வது குற்றமாகும். இந்திய குடிமக்களில் ஏதேனும் ஒரு பிரிவினரை, மற்றொரு பிரிவினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தூண்டுகிற மாதிரியான போஸ்டர்களை ஒட்டுவது அல்லது சுவற்றில் விளம்பரம் செய்வது குற்றமாகும். "பொதுமக்கள் பார்வையில் படக்கூடிய இடம்" என்பதில் தனியார் இடம் அல்லது கட்டடம், நினைவுச் சின்னம், சிலை, கம்பம், சுவர், வேலி, மரம் அல்லது பொருள் அல்லது பொது இடத்தில் கடந்து செல்பவருக்கு அல்லது இருப்பவருக்கு தெரியக்கூடிய சிறுகருவியும் உள்ளடங்கும். "பொது இடம் " என்பது ஏதேனும் இடத்தில் (சாலை, தெரு அல்லது வழிப்பாதை உட்பட) பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய அல்லது உரிமை கொண்டுள்ள இடம் என்று அர்த்தமாகும். பிரிவு 3 ன்படி, பொதுமக்கள் பார்வையில் படக்கூடிய ஒரு இடத்தில் தவறான விளம்பரத்தை ஒட்டினாலோ அல்லது எழுதினாலோ அல்லது காட்சிப் படுத்தினாலோ அந்த நபருக்கு 1 வருட சிறை தண்டனை அல்லது ரூ. 5000/- அபராதம் அல்லது இரண்டும் உண்டு. பிரிவு 3(அ) ன்படி போக்குவரத்து குழுவின் அனுமதி இல்லாமல் வாகன ஓட்டுநரின் பார்வையை திசை திருப்பக்கூடிய அல்லது பாதுகாப்புக்கு கேடு விளைவிக்ககூடிய நடந்து செல்வோருக்கு அல்லது ஓட்டுநருக்கு அல்லது வாகனத்திற்கு உண்மையிலேயே அபாயம் விளைவிக்ககூடிய முறையில் பொது இடம் எதையும் பயன்படுத்துகிற நடந்து செல்லும் நபரின் அல்லது வாகன ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பக்கூடிய வகையில் போஸ்டர்களையோ அல்லது விளம்பரத்தையோ செய்தால் அந்த நபருக்கு 1 வருட சிறை தண்டனை அல்லது ரூ. 1000/- அபராதம் அல்லது இரண்டும் உண்டு. ஒருவேளை நபர் ஒருவர் போஸ்டர் அல்லது விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் போக்குவரத்து குழுவின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கொடுக்க போக்குவரத்து குழு முடிவு செய்தால் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். 1. விளம்பரம் எந்த இடத்தில் செய்ய கருதப்பட்டுள்ளது 2. இயங்குகின்ற வாகனத்திற்கு அந்த விளம்பரம் எந்த விளைவினையும் ஏற்படுத்துமா 3. வரையறுக்கப்படக்கூடிய ஏனைய பொருட்கள் பிரிவு 3(ஆ)ன்படி சென்னை மாநகரத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போக்குவரத்து குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். அந்த ஒவ்வொரு குழுவிலும் சென்னை மாநகரம் என்றால், காவல்துறை ஆணையர் (போக்குவரத்து) இருக்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளரும், மாநில அரசால் நியமிக்கப்படும் ஏனைய 5 அரசு சார்பற்ற உறுப்பினர்களும் இருக்க வேண்டும். அவர்களில் இருவர் மகளிராக இருக்க வேண்டும்.
செய்தியை பகிர்ந்து கொள்ள:

இன்றைய செய்திகள்

error: Content is protected !!