குழந்தையை விற்ற தாய், காவல் துறையின் விசாரணை

admin1
 சென்னை :  திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர்,  ஒன்றியம் சத்தரை கொள்ளுமேடு, பகுதியை சேர்ந்த சந்திரா. இவருக்கு கடந்த 5-ந் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில், அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நம்பிராஜன் கூலிவேலை செய்து வருகிறார். சந்திரா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்,  துப்புரவு பணி செய்து வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் அவர்கள் வறுமையில் வாடி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று சந்திரா, குழந்தையின்றி காணப்பட்டார். இது குறித்து அவரது உறவினர்கள், சந்திராவிடம் கேட்டபோது, அவர் உரிய பதில் அளிக்கவில்லை.
உடனடியாக அவர்கள் குழந்தையை, காணவில்லை என்று மப்பேடு காவல் துறையில், புகார் செய்தனர். காவல் ஆய்வாளர் திரு. அந்தோணி ஸ்டாலின்,  உதவி ஆய்வாளர் திரு. இளங்கோ,  மற்றும் காவல் துறையினர், நடத்திய விசாரணையில் சந்திரா, பிறந்து 5 நாட்களே ஆன தன்னுடைய ஆண் குழந்தையை, தன்னுடன் பணியாற்றி வந்த ஜெயந்தியை, பேரம்பாக்கத்திற்கு வரவழைத்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காவல் துறையினர்,  ஜெயந்தியிடம் இருந்து,  குழந்தையை மீட்டனர்.  திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழுமத்தில் வைத்து சந்திராவிடம் நடத்தப்பட்ட,   விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக, குழந்தையை விற்றது தெரியவந்தது. காவல் துறையினர்,  சந்திரா மற்றும் ஜெயந்தியிடம், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பாலியல் குற்றத்தில், குண்டர் சட்டத்தில் கைது

582 அரியலூர் :  அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த (15),  வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உடையார்பாளையம், தெற்கு தெருவை சேர்ந்த, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452