குற்றவாளியை கொலை செய்ய, திட்டம் தீட்டிய ரவுடி கும்பல் கைது

admin1

திருவள்ளூர் : பொன்னேரி  தொழில் போட்டியில்,  முன் விரோதத்தில், எதிராளியை கொலை செய்ய,  திட்டமிட்டிருந்த, ரவுடியை, முந்திக் கொண்டு தீர்த்துக் கட்டிய,  ஆறு பேர் கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொன்னேரி தாலுக்கா அலுவலக சாலையை, சேர்ந்தவர் ஜவகர், (32),  பல்வேறு குற்ற வழக்குகளில்,  தொடர்புடையவர். இவருக்கும், வேண்பாக்கம், பள்ளம் பகுதியை சேர்ந்த விஜய், (32), என்பவருக்கும் இடையே, முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 8ம் தேதி இரவு, தன் தாயாரை பார்க்க, வேண்பாக்கம் சென்றபோது, ஜவகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவருடன் சென்ற, மைத்துனர் சிகன், 28, வெட்டுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஜவகர் கொலை வழக்கு தொடர்பாக, பொன்னேரி காவல்துறையினர், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேண்பாக்கம், பள்ளம் பகுதியை சேர்ந்த, விஜய் தரப்பினர் முன் விரோதத்தில், ஜவகரை வெட்டி கொலை செய்தது தெரிந்தது.

மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் உறவினர்கள், கஞ்சா விற்பனை, அடிதடி தகராறுகளில் ஈடுபடுவது என, இருவர் மீதும் வழக்குகள்,  உள்ளன.  இதனால் இவர்களுக்குள் யார் பெரியவர்,  என்ற போட்டியில், விஜயை கொலை செய்ய, ஜவகர் திட்டம் தீட்டியுள்ளார்.  இதை அறிந்த விஜய் முந்திக் கொண்டு, ஜவகரை தீர்த்துக் கட்டியது,  தெரிந்தது. ஆறு பேரையும், 15 நாள் நீதிமன்ற காவலில்,  வைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, ஆறு பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திண்டுக்கல் காவல்துறையின், ஆழ்ந்த இரங்கல்

581 திண்டுக்கல்:  சென்னை ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு,  திண்டுக்கல்லைச் சேர்ந்த காவலர் திரு. சரவணன், சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தார்.   திண்டுக்கல்லில் இருந்து நமது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452