குடும்ப தகராறு, பெண் தற்கொலை

admin1
திருவள்ளூர் :  திருத்தணி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி, (28), கூலித் தொழிலாளி. இவருக்கும், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அடுத்த, தும்பூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா, (20), என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இந்நிலையில், நல்லதம்பி சரியாக வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், கணவர், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பவித்ரா, கணவரிடம் தினமும் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக, கூறப்படுகிறது. இதற்கு நல்லதம்பி மறுத்ததால், மனமுடைந்த பவித்ரா, வீட்டில் மின் விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து காவல் துறையினர்,  விசாரித்து வருகின்றனர்.

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருட்டு வழக்கு விசாரணை, உள்துறை செயலர் கண்காணிப்பு

519 மதுரை :  திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடுவில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடுபோன வழக்கை தாண்டிக்குடி காவல் துறையினர் ,விசாரித்து முடிக்க வேண்டும். அதை தமிழக […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452