காவல் சரக எல்லைகள் மாற்றம் , காவல் ஆணையரின் உத்தரவு!

admin1

சென்னை :   சென்னை காவல் நிலைய எல்லைகள் மறுசீரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், ராயப்பேட்டை சரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் சரகத்தில்,  ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ், ஜாம்பஜார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அனைத்து மகளிர், காவல் நிலையங்கள் வருகின்றன. மேலும், தரமணி சரகத்தில், தரமணி, துரைபாக்கம் காவல் நிலையங்களும், நீலங்கரை சரகத்தில், நீலங்கரை, திருவான்மியூர் காவல் நிலையங்களும் வருகின்றன.

வடபழனி சரகத்தில் வடபழனி, கே.கே.நகர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் வருகின்றன. கோயம்பேடு சரகத்தில், கோயம்பேடு மற்றும் சி.எம்.பி.டி., காவல் நிலையங்களும், புதிதாக உருவாக்கப்பட்ட விருகம்பாக்கம் சரகத்தில், விருகம்பாக்கம், மதுரவாயல் காவல்  நிலையங்கள் வருகின்றன. இதற்கான உத்தரவை சென்னை  காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால்,  பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாமல்லபுரத்தில், டி.ஐ.ஜி. ஆய்வு!

580 செங்கல்பட்டு :    செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்,  நடைபெற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452