தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;
பதவி |
பதவிச் சின்னம் |
---|---|
காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) |
அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைத் தலைவர் (IGP) |
ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) |
அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) |
அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து |
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP) |
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) |
அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து |
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP) |
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) |
மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து |
ஆய்வாளர் (Inspector) |
மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும் |
உதவி ஆய்வாளர் (Sub-Inspector) |
இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும் |
தலைமைக் காவலர் (Head Constable) |
சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும் |
முதல்நிலைக் காவலர் (PC-I) |
சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும் |
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) |
பட்டை எதுவுமில்லை. |