காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கண் பரிசோதனை

Prakash

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினருடன் இணைந்து ,அறம் செய்வோம் அறக்கட்டளை-2020, வாசன் கண் மருத்துவமனை மற்றும் செட்டிநாடு மருத்துவமனை சார்பில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இதயம் சம்பந்தமான பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. தீபா சத்யன் இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு காவலர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான பரிசோதனையை துவக்கிவைத்து , நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது சம்பந்தமாக காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்துக்கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

294 திருவாரூர்: கொரோனா (ஒமிக்ரான் ) பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் நேற்று […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452