காக்கைக்கு உணவளித்த காக்கிகள், கவிதை நயத்தில் வெளிப்படுத்திய ஆய்வாளர் இலக்குவண்

Admin

அடுக்கம்பாறை
மருத்துவ மனை
புறக் காவல்நிலையம்
தினம் வரும் காகம்

உணவு நேரத்திற்கு
சரியாய் வந்து
உணவு பெற்று
சொல்லும் அதிசயம்,

முதல்நாள் நான்
காலை உணவை
பிரித்ததும் சத்தம்
போட்டது ஜன்னலருகே !!!

காரணம் கேட்க
காகம் வரும் தினம்
உணவு நேரம்,
என தலைமை காவலர்
சரவணன் இயம்பினார்.

நானும் அன்று சிறிது
பொங்கல் வைத்தேன்,
சட்டென்று சாப்பிட்டு
சிறிது கொண்டும்
சென்றது,

அதன் காரணம் இன்று
தெரிந்தது,
சிறுநீர் கழிக்க சென்ற
போது காகம் வந்து
கத்தியது,

பணியில் இருந்த
சிறப்பு உதவி-ஆய்வாளர்
சிவாஜி அவர்கள் கையில் சிறிது சிறிது
உடைத்து வைத்த
பிஸ்கெட் தின்றது,
நானும் தந்தேன்
ஆசையுடன் சாப்பிட்டது

அன்றும் வழக்கம்போல்
சிறிது பிஸ்கெட்டை
சிக்கென கவ்வி செல்ல
சிவாஜியிடம் கேட்டேன் ,

அவர் சொன்ன பதிலை
அப்படியே தருகிறேன்,

“” தினம் வரும் காகம்
தின்று முடித்தவுடன்
திரும்பி செல்லும்
திருட்டு காக்கை தான்
ஈன்ற குஞ்சுகள்
தனியாய் இருப்பதை
கண்டு உண்டது மீதி
கொண்டு செல்லும்
என
காகத்தின் தாய்மை
உணர்வை
பக்குவமாய் பகிர்ந்தார்
என்னுடன்,

புகைப்படத்துடன் தருகிறேன்
தங்களிடம்,

இவண்

இலக்குவன்

காவல் ஆய்வாளர்
மாநில குற்றப்பிரிவு
வேலூர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கவரபேட்டையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை, உதவி SI சிவராஜ் எச்சரிக்கை

227 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவையும் மீறி பொதுமக்கள் கூட்டமாக வீதிகளில் நடமாடிக் கொண்டிருகின்றனர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452