கள்ளச்சாராயம் ஊறல் வைத்திருந்த 6 பேர் கைது

Admin

இராமநாதபுரம் : ராமேஸ்வரம், மண்டபத்தில் கள்ளசாராயம் காய்ச்ச பானையில் ஊறல் வைத்திருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம், சம்பை கிராமம் இடையே சுற்றுசாலை அருகே தோப்புக்குள் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்ச பானையில் ஊறல் வைத்து புதைத்து வைத்திருந்தனர். ராமேஸ்வரம் டவுன் போலீஸ் எஸ்.ஐ.,சதீஸ்குமார் மற்றும் போலீசார் அங்கு பதுக்கி இருந்த 15 லிட்டர் ஊறல் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ராமேஸ்வரம், ராமநாதபுரம் சேர்ந்த ஜெயகாந்தன் 29, முனீஸ்வரன் 30, பிரகாஷ் 29, மங்களேஸ்வரன் 36, சுரேஷ் 32, ஆகியோரை கைது செய்தனர். மண்டபம் பிள்ளைமடத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 51, இங்குள்ள பனைமரத் தோப்பில் கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார்.

மண்டபம் போலீசார் வெள்ளைச்சாமியை கைது செய்து பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

 

இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாணியம்பாடியில் பெண்காவல் ஆய்வாளருக்கு கொரோனா.

101 திருப்பத்தூர் : வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளரான கிராமிய காவல் அவருக்கு வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த காவல் நிலைத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452