கடத்த முயன்ற ரூ.34¾ லட்சம், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்!

admin1

சென்னை :  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில்,  இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு . உதய் பாஸ்கர்,  உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புக்கு திருச்சியை சேர்ந்த லட்சுமி கந்தசாமி  (35), கனகவல்லி சுப்பிரமணி (37), திண்டுக்கலை சேர்ந்த மாரியம்மாள் சுடலைமுத்து (37),  ஆகியோர் செல்ல வந்து இருந்தனர். அவர்கள் 3 பேரையும் சந்தேகத்தில் நிறுத்தி,  விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது எதுவுமில்லை. தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது ஆடைக்குள் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டுப்பிடித்தனா். 3 பேரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக 3 பெண்களை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இரும்பு திருடிய, 2 வாலிபர்கள் கைது!

571 கோவை :  கோவை பீளமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் மோசஸ் ஜெபராஜ் (56),  தனியார் நிறுவன மேலாளர். இவர் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில்,  மோட்டார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452