ஒத்துழைப்பு நல்கி வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin

அரியலூர் : அரியலூர் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் முன்னிலையில் 12/04/2020 அன்று அரியலூர் நகரின் முக்கிய பகுதிகளின் கலெக்டரெட் ரவுண்டானா மற்றும் கட்டுப்பாட்டு மண்டலமான செந்துறை ஆகிய பகுதிகள் ட்ரோன் மூலம் மாவட்ட காவல் துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.

அரசின் சில நிர்வாக அலுவலகம், மருந்தகம் மற்றும் பால் நிலையம் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. உத்தரவைமீறி வீதியில் திரியும் நபர்கள் கண்டறிய பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வீட்டிலேயே இருக்கின்றனர். செந்துறை, அரியலூர் பாதுகாப்பு(கட்டுப்பாட்டு)மண்டலமாக உள்ளதால் இங்கு வாகனங்கள் மற்றும் மக்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்தும் கேமரா மூலம் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள் 144 தடை உத்தரவை உதாசீனப்படுத்தி வெளியே தெரிந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இதனால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கும் என்பதை உணர்ந்து வீட்டிலேயே இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 3,056 பேர் மீது வழக்குப்பதிவு, 2,008 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் 

217 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 3,056 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,008 இருசக்கர […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452