ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை பெருநகர காவல் அணியினரை நேரில் அழைத்து பாராட்டு 

Prakash

சென்னை: கடந்த 06.01.2022 முதல் 08.01.2022 வரை, திருச்சியில் நடைபெற்ற 61வது மாநில அளவிலான காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினர் கலந்து கொண்டு 48 பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் இன்று (10.01.2022) மாலை மாநில அளவிலான காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் விளையாட்டு அணியினரை நேரில் அழைத்து பாராட்டி குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர்.திரு.J.லோகநாதன், இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.B.சாமுண்டீஸ்வரி, இ.கா.ப, துணை ஆணையாளர் திரு.L.பாலஜிசரவணண், (தலைமையிடம்), திரு.சௌந்திரராஜன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மையை பாராட்டி பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

288 தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூபாய் 20,000/- பணத்தை நேர்மையுடன் எடுத்து காவல் நிலையம் மூலம் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452