“ஒரு காவலர் ஒரு குடும்பம்” தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

Admin

மதுரை : மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கிவைத்தார்.

நேற்று 15.04.2020- ம் தேதி சுப்பிரமணியபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. DR.A.D.சக்கரவர்த்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. E.கதிரவன், சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் முத்து முருகன், காவலர்கள் சசிகுமார், ரவிபாண்டி மற்றும் முதல் நிலை காவலர் சத்தியேந்திரன் ஆகியோர்கள் இணைந்து கோபாலிபுரம் கிராமத்தில் உள்ள 30 ஏழை குடும்பங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பண்டங்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினார்கள். மதுரை மாநகரில் உள்ள 24 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் இத்திட்டம் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்பட்டு உதவி வருகின்றனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

 வரைபடம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்

198 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், தளக்காவூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452