என் கை, காலை கட்டிப்போட்டு.. பெட்ரோல் ஊத்தி எரிச்சிட்டாங்க.. பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த சிறுமி மரணம்

Admin

“நான் தனியா வீட்டில் இருந்தேன்.. அவங்க 2 பேரும் வந்து என் கை, காலை கட்டிப்போட்டுட்டு தீ வெச்சு கொளுத்திட்டாங்க” என்று சிறுமி வாக்குமூலம் இறந்துள்ளது தமிழகத்தையே அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சிறுமதுரை கிராமம். இங்கு வசித்து வருபவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ. 15 வயதாகிறது. 10 வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயஸ்ரீ உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீயை மீட்ட அவர்கள், உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டது. அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த தன்னை முருகன், கலியபெருமாள் 2 பேரும் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக சொன்னார். ஜெயஸ்ரீ சொன்ன வாக்குமூலத்தை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் பதிவு செய்து கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இன்று காலை ஜெயஸ்ரீ  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி ஜெயஸ்ரீயின் பெற்றோர் சொல்லும்போது, “எங்களுக்கும் அந்த 2 பேருக்கும் ஏற்கனவே பகை இருக்கிறது. ஒருமுறை என் மகனைகூட அவர்கள் தாக்கிவிட்டனர். அவனை மீட்டு இதேபோல சிகிச்சை தந்து வருகிறோம்.

மகனை தாக்கிய இவர்கள் மீது ஸ்டேஷனில் புகார் தர போயிருந்தோம்.. அந்த ஆத்திரத்தில்தான் மகளை இப்படி தீ வைத்து வைத்து எரித்து விட்டனர். அவர்களை சும்மா விடக்கூடாது என்று கதறி அழுதனர். இதையடுத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகாநதி விடுதி, லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு

146 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 08.05.2020 அன்று மாலை கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்திற்கு சென்று, கொரோனா அறிகுறி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452