ஊரடங்கு உத்தரவை மீறிய 3,235 பேர் மீது வழக்குப்பதிவு, 2,131 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 3,235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,131 இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட காவல் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் நோய் தொற்று இதுவரை 24 நபர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு சுகாதாரதுறை வழிகாட்டுதல் படி பல்வேறு கட்டுபாடுகள் விதித்து 90க்கும் மேற்பட்ட இடங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் அடிக்கடி வர வேண்டாம் என்றும் மீறி வந்தால் கடும் சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வீடு தேடிச் சென்று மளிகை பொருட்களை வழங்கும் காவல்துறை அதிகாரிகள்.

196 அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் முதியவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் அரியலூர் உட்கோட்ட துணை காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452