உறவினருடன் செல்பி, மனைவிக்கு கத்தி குத்து

admin1

கோவை : கோவை கவுண்டம்பாளையம், பக்கம் உள்ள இடையர்பாளையம் டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த எட்வர்ட் ஜான் (49),  இவரது மனைவி கிரேஸ் பியூலா (33), இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கிரேஸ் பியூலா சகோதரியின் திருமணம்,  கோவையில் நடந்தது. அப்போதும் கிரேஸ் பியூலா,  அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். இது அவரது கணவர் எட்வர்ட் ஜானுக்கு பிடிக்கவில்லை.  இதுகுறித்து தனது மனைவியிடம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் இரவில் குடிபோதையில்,  வீட்டுக்கு வந்த எட்வர்ட் ஜான், செல்பி எடுத்த விவகாரம் குறித்து கேட்டுமனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த எட்வர்ட் ஜான், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கிரேஸ் பியூலாவைகத்தியால் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவையில், உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து துடியலூர்,  காவல் துறையில், புகார் செய்யப்பட்டது. வழக்குபதிவு செய்து கணவர் எட்வர்ட் ஜானை கைது செய்தனர்.  இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இறச்சகுளத்தில் தம்பதியினர் மீது தாக்குதல், 2 பேர் மீது வழக்குபதிவு

571 கரூர் :  பூதப்பாண்டி, மே 13,  பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவா(42),  வழக்கறிஞர். இவர் நாகர்கோவிலில் தனது குடும்பத்தினருடன்,  வசித்து வருகிறார். சிவாவும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452