“இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்பதற்கேற்ப வறியவர்களுக்கு உதவி செய்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ்

Admin

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மாதம், 24ல் இருந்து, நாடு தழுவிய ஊரடங்கு அமலாகி, 14ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னும், கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்ததால், இரண்டாம் முறையாக, வரும், 3ம் தேதி வரை, சில தளர்வுகளுடன், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால், ஏழை எளிய மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஊரடங்கு பிறப்பித்த நாள் முதல் இந்நாள் வரை பல்வேறு நலதிட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

சென்னை, நேதாஜி நகர் 5வது தெருவில் வசிக்கக்கூடிய 10 ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது. அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, துவரம்பருப்பு, சேமியா, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் மளிகை பொருட்கள் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

நுங்கம்பாக்கம் காவல்நிலையம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு! பொதுமக்கள் கவலை

334 சென்னை : தமிழகத்திலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது என்பதும் சென்னையில் மட்டும் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452