இன்றைய மதுரை கிரைம்ஸ் 20/07/2021

Admin

மதுரை திருநகரில் குடும்பச் சண்டையில் ஆக்சா பிளேடால் வெட்டு போலீஸ் விசாரணை:

மதுரை திருநகர் தனக்கன்குளம் நேதாஜிநகரை சேர்ந்தவர் சேகர் 53.இவரது உறவினர்கள் அதேபகுதியை சேர்ந்த பழனிக்குமார். இவர்களுக்குள், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துவந்தது.
இந்நிலையில், தனக்கன்குளத்தில் உள்ள பர்னிச்சர்கடைமுன்பு நின்றிருந்த சேகரை ,பழனிக்குமார், மனைவி செல்வி, மகன் கள் செல்வகுமார்,சுந்தரபாண்டி ஆகியோர் சரமாரியாக தாக்கி ஆக்சா பிளேடால் வெட்டி உள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சேகர் திருநகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் பழனிக்குமார் குடும்பத்தினர் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தெப்பகுளத்தில் பெண் மீது தாக்குதல் வாலிபர் கைது:

மதுரை கிழக்கு சி.எம்.ஆர்.ரோட்டில் வசிப்பவர் பாண்டி மனைவி ஜான்சிராணி24. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் வெற்றிவேல் பாண்டி 22. இவர்களுக்குள் ,முன் விரோதம் இருந்தது.
இந் நிலையில், ஜான்சிராணியை ஆபாசமாக திட்டி வெற்றிவேல்பாண்டி தாக்கி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, ஜான்சிராணிபுகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து வெற்றிவேல்பாண்டியை கைது செய்தனர்.

மதுரை தல்லாகுளத்தில் வேலைக்கு சென்று திரும்பிய மனைவியை வழிமறித்து தாக்கிய கணவர் கைது:

மதுரை அஞ்சல் நகரைச்சேர்ந்தவர் அருண்குமார் மனைவி நித்யா 25. கணவர் அருண்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நித்யாவை, வழிமறித்த கணவர் அருண்குமார் மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிஉள்ளார். இது குறித்து, நித்யா புகாரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவர் அருண்குமாரை கைது செய்தனர்.

மதுரை பழங்காநத்தத்தில் காதலை , பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை:

மதுரை பழங்காநத்தம் நேருநகரைச்சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மணிகண்டன்23.இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தந்தை, கருப்பசாமி கண்டித்துள்ளார் .இதனால், மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ,எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

உடற்தகுதி தேர்வு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை

687 விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் துறைதுணை தலைவர் திரு. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452